வாரணாசி: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி- மோடி இரங்கல்
வாரணாசி: உத்திர பிரதேசம் வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா பங்கேற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள ஜெய் குருதேவ் ஆசிரமம் சார்பாக, வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை பேரணி நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பேரணியாகச் சென்றனர்.

ராஜ்காட் மேம்பாலத்தின் மீது நெருக்கடியான இடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக்கொண்டு முந்த முயன்றதால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வரையும் இழப்பீடு வழங்குவதாக, உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
வாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அவர் ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாக அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications