19 வயது பாலியல் குற்றவாளிக்கு தூக்கு... சட்டத்தை சரியாக பயன்படுத்திய ராஜஸ்தான் அரசு... சபாஷ்!
7 மாத குழந்தையை கற்பழித்தவனுக்கு மரண தண்டனை தரப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: சட்டமும் நீதியும் மட்டும் இல்லையென்றால் நாட்டில் இன்னும் என்னென்ன பாவங்கள் எவ்வளவு பெருகிவரும் என தெரியாது. தண்டனை சட்டத்தை சரியாக இயற்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.
ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி தம்பதி இருவரும் குழந்தையை உறவினர் ஒருவரது வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவந்தனர். திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே குழந்தை இல்லை. அதனால் குழந்தை எங்கே கேட்டதற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் தூக்கிக் கொண்டு போனதாக அந்த உறவினர்கள் பதிலளித்தனர். பக்கத்து வீட்டிலும் குழந்தையும் இல்லை, அந்த இளைஞரும் இல்லை.

அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் பதறியடித்து கொண்டு பெற்றோர் ஓடிசென்றனர். அங்கு குழந்தை கதறி அழுதபடி கிடந்தது. அதன் உடலில் காயங்கள் நிறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பக்கத்துவீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு வயது 19.
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 7 மாத குழந்தை என்றும் பாராமல் சிதைத்த அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம்தான், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்த மரணதண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் இந்த இளைஞர்தான்.
கைக்குழந்தைகளை கூட விட்டுவைக்காத காம மனிதர்கள் நாடெங்கும் பெருகிவருகின்றனர். இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கயவர்களுக்கு, தன்னுடைய நிஜ ரூபத்தை சட்டம் அவ்வப்போது வெளிப்படுத்தி தண்டிக்கும்போது ஓரளவு மனநிறைவு அடைகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிசுக்களை நினைத்தால் மனம் கனத்துதான் போகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications