ஹைதராபாத்: வகுப்பறையில் தகராறு; கல்லூரிமாணவர் அடித்துக் கொலை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவரின் பெயர் கே.எஸ்.ஹர்ஷவர்தன் ராவ் என்பதாகும். இவர் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். தன்னுடன் படிக்கும் சக மாணவியை கிண்டல் செய்த சீனியர் மாணவர்களை தட்டி ஹர்சவர்த்தன் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சீனியர் மாணவர் சதீஷ், வகுப்பறைக்குள் சென்று ஹர்ஷவர்த்தனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் ஹர்சவர்தன் சுருண்டு விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த ஹர்ஷவர்த்தனை சம மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹர்சவர்த்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கல்லூரி மதிய உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் வைத்து இந்த மோதல் நடந்தது. சதீஷ் கிண்டல் செய்த மாணவி இறந்த மாணவருடன் நட்பாக பழகி வந்தார். அவரை கிண்டல் செய்ததால் தான் ஹர்ஷவர்த்தன் தட்டிக் கேட்டதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த மாணவர் சதீஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குதான் என்று ஹர்ஷவர்த்தனின் சகோதரர், குற்றம் சாட்டியுள்ளார். கல்லூரியில் மூத்த மாணவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஹர்ஷவர்த்தனின் சகோதரர் தெரிவித்துள்ளார். எனது சகோதர் மிகவும் அமைதியானவர். அந்த பெண்ணை பாதுகாக்க வேண்டி தனது உயிரை கொடுத்துள்ளார் " என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சீனிவாஸ், இரண்டு மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையில், ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டுள்ளார். இதனால் மயக்கம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து இருக்கிறார் என்றார்.
சமீபகாலங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. கத்தி, ஆயுதங்களை கொண்டு தாக்கி காயப்படுத்தி வந்த மாணவர்கள் உயிரை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்திலும் பள்ளிகளில் இதேபோல இரண்டு கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதே நிலை நீடித்தால் இனி பள்ளி, கல்லூரிகளின் அருகில் காவல்நிலையங்களை அமைக்கவேண்டிய நிலை உருவாகும் என்பதே உண்மை.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications