ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்கள்... தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய கேரள போலீஸ்
Recommended Video
சபரிமலை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்களை இன்று கேரள போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் வருவதற்கு ஆண்டாண்டு காலமாக தடை இருந்து வருகிறது. இந்த தடையை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன்படிஅனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என்ற நிலை உருவானது.

இந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அமல்படுத்த ஆளும்இடதுசாரி அரசு முயன்றது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கடந்த ஆண்டு சபரிமலை சீசனில் பெரும் போராட்டம், வன்முறை, பதற்றம் என்று நீடித்து இருந்தது.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உள்ளது. அதேநேரம் பெண்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பில் குறிப்பிடவில்லை.
இதையடுத்து இந்த ஆண்டு சபரிமலைசீசனில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என கேரள அரசு அறிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களை மட்டுமே அனுமதிப்போம் என்றும் அறிவித்தது.
இதன்படி நேற்று சபரிமலைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சூழலில் இன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்களை இன்று கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நிலக்கலில் பேருந்தில் போலீஸ் சோதனை நடத்தியதில் 2 பெண்களிடம் இருந்து வயது சான்றிதழை சரிபார்க்கும் போது 50 வயது குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் சபரிமலைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications