ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியில் இன்று மாலை மத்திய ரிசர்வ் படை போலீசார் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். பாண்டவ் பார்க் அருகில் சென்றபோது அவர்களை வழிமறித்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து அவந்திபோரா பகுதி முழுவதும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இருப்பினும் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்த மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கியதில் பொதுமக்கள் 2 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் மாதம் நடத்திய தாக்குதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications