2 சரக்கு ரயில்கள் பயங்கர மோதல்.. சிக்னல் கோளாறால் உத்தர பிரதேசத்தில் விபத்து.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சிக்னல் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது பின்னால் வந்த இன்னொரு சரக்கு ரயில் மோதி விபத்து நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஃபதிப்புர் மாவட்டம் காகா என்ற இடத்தின் அருகே பாம்பீபுர் உள்ளது. இந்த பாம்பீர் பக்கத்தில் செல்லும் தண்டவாளத்தில் இன்று காலையில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

goods train uttar pradesh railway

அப்போது சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் மீது சரக்கு ரயில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த வேளையில் பின்னால் இன்னொரு சரக்கு ரயில் வந்தது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிற்பதை அறியாத நிலையில் அந்த ரயில் வேகமாக வந்தது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு ரயிலின் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் இன்ஜின் மற்றும் நின்ற சரக்கு ரயிலின் கடைசி பெட்டி (Guard Compartment) ஆகியவை தடம் புரண்டன. மேலும் இன்ஜின் டிரைவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கிய 2 ரயில்களும் சரக்கு ரயில்களாகும். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த ரயில் விபத்து காரணமாக பாம்பீபுர் தண்டவாளத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது சரக்கு ரயில்கள் செல்லும் தண்டவாளமாகும். இதனால் சில சரக்கு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு பல சரக்கு ரயில்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில் சேவையை மீண்டும் கொண்டு வரும் வகையில் தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+