9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 3 சக மாணவர்கள்
குர்காவ்ன்: குர்காவ்னில் 9ம் வகுப்பு மாணவி சக மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
குர்காவ்னைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்த பிறகு நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்றில் அவருடன் படிக்கும் 3 மாணவர்கள் வந்தனர். அவர்கள் மாணவியை ஆட்டோ டிரைவர் உதவியுடன் கடத்திச் சென்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று ஆட்டோ டிரைவர் மற்றும் மாணவர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
அவர்களின் மிரட்டலை தாண்டி மாணவி நடந்த சம்பவம் பற்றி வெள்ளிக்கிழமை மாலை போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு மாணவர் மற்றும் ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications