மேற்கு வங்கத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மற்றும் நாடியா மாவட்டங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரகுநாதகஞ்ச் பகுதியில் புதிதாக கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் குழந்தைகள் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் ஒரு பையில் வைத்திருந்த குண்டுகள் மீது கல்பட்டு அவை வெடித்துச் சிதறின.

இதில் சிறுவன் ஒருவர் பலியானார். மேலும் பல குழந்தைகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடியா மாவட்டத்தில் உள்ள நாதுங்கிராம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார், இரண்டு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications