ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட பகுதியான ஹிந்த் சீதாபோராவை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

பாதுகாப்பு படையினர் தங்களை தேடுவதை அறிந்த தீவிரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் விதமாக திருப்பி துப்பாக்கியால் சுட்டு தாக்கினர்.
Jammu & Kashmir: Exchange of fire underway between security forces and terrorists in Hind Sita Pora area of Shopian district. More details awaited. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/mkCUBcrSxm
— ANI (@ANI) May 12, 2019
தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடும் நடப்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications