முஸ்லிம் பணியாளர்கள் வேண்டாம்.. கோவிலுக்கு மத்திய பிரதேச பாஜக அரசு திடீர் உத்தரவு.. வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மைஹார் மா சாரதா கோவிலில் முஸ்லிம் பணியாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1988 ம் ஆண்டில் இருந்து அங்கு பணியாற்றும் முஸ்லிம்கள் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதற்கான உத்தரவை அறநிலையத்துறை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் மா சாரதா கோவில். இந்த கோவில் மத்திய பிரதேச மாநிலத்தின் மைஹார் பகுதியில் அமைந்துள்ளது.

2 muslims who worked since 1988 will be terminate from Maihar Maa sharda Temple

பழம்பெருமை வாய்ந்து இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் மாநில அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மா சாரதா கோவில் நிர்வாக கமிட்டியில் முஸ்லிம் ஊழியர்கள் இடம்பெற்று இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மாநில அரசின் அறநிலையத்துறை துணை செயலாளர் புஷ்பா காலேஷ் கையெழுத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் யாராவது கோவில் நிர்வாக கமிட்டியில் இருக்கின்றனரா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அங்கு 2 முஸ்லிம்கள் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 1988 ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் நிலையில் மாநில அரசின் இந்த உத்தரவால் இருவரின் வேலையில் இருந்து நீக்கம்செய்யப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரசு பிறப்பித்த உத்தரவின்படி மைஹாரில் இறைச்சி மற்றும் மதுபானம் விற்கவும் தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த 2 உத்தரவுக்கு பின்னணியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அமைப்பினர் தான் அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி இத்தகைய உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி அந்த மாவட்ட கலெக்டர் அனுராக் வர்மாவிடம் கேட்கப்பட்டது. ஏனென்றால் கோவில் நிர்வாக கமிட்டியின் தலைவராக இவர் தான் உள்ளார். இதுபற்றிய கேள்விக்கு அனுராக் வர்மா, ‛‛அரசு உத்தரவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' னெ தெரிவித்துள்ளார். இதன்மூலம் கோவில் நிர்வாக கமிட்டியில் உள்ள 2 முஸ்லிம்கள் நீக்கம் செய்வது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+