அடப்பாவிகளா.. இப்படியுமா பண்ணுவீங்க.. உடம்பு பூரா செல்லோடேப் போட்டு ஒட்டி.. மது பாட்டில்கள் கடத்தல்!
அமராவதி: தெலுங்கானாவிலிருந்து ஆந்திராவுக்கு மது கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர். உடம்பு முழுவதும் மதுபாட்டில்களை செல்லோடேப் கொண்டு ஒட்டி மதுவை கடத்தினர்.
போலவரம் கிராமத்தில் கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தெலுங்கானா எல்லையிலிருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் அதிகாலை 5 மணிக்கு வந்தனர்.

அவர்களது நடமாட்டம் போலீஸாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. மேலும் அவர்களது உடல் வாகுவும் ஏதோ சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. இதனால் அவர்கள் இருவரையும் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
அப்போது இருவரும் தங்கள் மார்புகளில் 101 மது பாட்டில்களை வைத்து செல்லோ டேப் கொண்டு சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை தெலுங்கானாவிலிருந்து ஆந்திராவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அஸ்வராவ்பேடாவை சேர்ந்தவர் தேவரகொண்டா ராஜேஷ், தேவரகொண்டா ஸ்ரீனிவாஸ் ராவ் என தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications