உ.பி.யில் நாட்டுத் துப்பாக்கியால் மாணவிகளைச் சுட்ட மாணவர் தலைமறைவு : 2 மாணவிகள் காயம்
மீரட்: உத்திரப்பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டத்தில் இரு கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். தலைமறைவான மாணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநில மீரட் நகர் அருகே உள்ளது கும்ராலா கிராமம். அங்குள்ள கல்லூரி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையில் நுழைந்துள்ளார் மாணவர் ஒருவர். அங்கிருந்த மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்மாணவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மாணவிகளை நோக்கிச் சுட்டுள்ளார்.
இதில் 2 மாணவிகள் மீது குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தப்பி ஓடி விட்டார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்ட மாணவர் பெயர் சல்மான் என்று தெரியவந்துள்ளது. மேலும், முன்விரோதம் ஏதும் இல்லை, சாதாரண வாக்குவாதம் மோதலாக முற்றியதே இந்த சம்பவத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவான சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவிகளின் பெற்றோருக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் கல்லூரி முதல்வர் அதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்காமல் தாமதப்படுத்தினார் என மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications