Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மசோதா நிறைவேற்றி 60 நாட்கள் நிறைவு அடைந்தும் கூட ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை.

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு மூலம், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

காலாவதியான சட்டம்

காலாவதியான சட்டம்

இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் தடை சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் அந்த அவசர சட்டம் காலாவதி ஆகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசும் உடனடியாக பதில் அனுப்பியது. ஆனாலும் அதன்பின்பும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது. அவசர சட்டம் காலாவதியான நிலையில் மசோதா மட்டும் நிலுவையில் உள்ளது.

மசோதா

மசோதா

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு உண்மையில் நடைபெற்றதா என்று தெரியவில்லை. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பான விவரங்களும் வெளியாகவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில் ஆளுநரின் சந்திப்பு தொடர்பாக வெளியான இந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன. முக்கியமாக திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தனர். இந்த நிலையில்தான் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். 21 வயதான வினோத் குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மம்சாபுரம் என்று பகுதியில் உரக்கடை வைத்திருப்பவர் தனசேகரன். இவரின் மகன் வினோத் குமார் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மதுரையில் படித்து வந்துள்ளார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி உள்ளார். இதில் பணத்தை இழந்த நிலையில், நேற்று தன்னுடைய விடுதியில் இருக்கும், காலி அறை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் போனை பறிமுதல் செய்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கடந்த 48 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலை ஆகும். நேற்று முதல்நாள் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எல்.வி. நகரை சேர்ந்த சங்கர் என்ற 29 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மியில் பல லட்சங்களை இழந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னணி

பின்னணி

பலரிடம் கடன் வாங்கி இவர் விளையாடி இருக்கிறார். தொடக்கத்தில் பணத்தை வென்றவர்.. அதன்பின் லட்சம் லட்சமாக இழந்துள்ளார். எப்படியாவது இழந்த காசை மீட்டு விடலாம் என்று மேலும் மேலும் கடன் வாங்கி ஆடி இருக்கிறார். ஆனால் மேலும் மேலும் பணத்தை இழந்து பல லட்சங்களுக்கு நஷ்டம் அடைந்து உள்ளார். சமீபத்தில் ஆன்லைன் அவசர சட்டம் காலாவதியான அதே நாளில் சென்னையில் ஒரு பெண் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் சென்னையில் ஐடி ஊழியர், கல்லூரி மாணவர், அதன்பின் கோவையில் ஒருவர் என்று பலர் மரணம் அடைந்துள்ளனர். ரம்மியில் எல்லாத்தையும் இழந்துட்டேன் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு நிதிஷ் குமார் என்ற இளைஞர் சென்னையில் தற்கொலை செய்துவிட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அவர் கல்லூரி படிக்கும் மாணவர்!இதேபோல்தான் சமீபத்தில் புதுச்சேரி கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார் ஆடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் இதுக்கு அடிமை ஆகிட்டேன்.கணக்கு பார்த்தால் ரூ.30 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் ரம்மியில் விட்டுள்ளேன். என்னால எதுவும் செய்ய முடியல. என் வாழ்க்கையே போயிடுச்சு. நான் போறேன்.. என்று கூறிவிட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் அங்கங்கே நடந்த சில கேஸ்களின் எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,குஜராத் , டெல்லி என்று பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது. மொத்தமாக தேசிய அளவில் இதற்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+