காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. 2 ராணுவத்தினர் வீர மரணம்!
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இரு வேறு சம்பவங்களில் 2 ராணுவத்தினரும் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி வீர மரணமடைந்துள்ளனர்.

குப்வாரா மாவட்டம் நவ்காம் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது நடந்த சண்டையில் 2 பாதுகாப்புப் படையினர் வீர மரணமடைந்தனர்.
குப்வாரா மாவட்டம், பாங்கஸ் பகுதியில் நடந்த இன்னொரு ஊடுருவல் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications