டெல்லியில் கார் கட்டுப்பாட்டால் தலைவலி: சில மணிநேரத்தில் 200 பேருக்கு அபராத சலான்
டெல்லி: டெல்லியில் கார்களுக்கான கட்டுப்பாட்டு அமலில் இருக்கும் நிலையில் இன்று காலை முதல் மதியத்திற்கு முன்பு வரை 200 பேருக்கு அபராத சலான் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று அளவுக்கு அதிகமாக மாசுபட்டுள்ளது. இந்நிலையில் காற்று மாசை குறைக்க கார்களுக்கான புதிய கட்டுப்பாட்டு முறையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 1ம் தேதி அறிமுகப்படுத்தி வைத்தார்.
சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு வரும் 15ம் தேதி வரை அமலில் இருக்கும். அதாவது ஒற்றைப்படை எண் கொண்ட தேதிகளில் சாலைகளில் ஒற்றைப் படை எண்கள் கொண்ட கார்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும். இரட்டைப் படை எண்கள் கொண்ட தேதிகளில் இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்களை மட்டுமே இயக்க வேண்டும்.

மற்றவர்கள் அரசு போக்குவரத்து, மெட்ரோ என பிற வகையில் பயணிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டபோது விடுமுறை நாட்களாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை மக்கள் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு கிளம்பினர். அதில் பலர் புதிய கட்டுப்பாடை பின்பற்றவில்லை. இதனால் இன்று காலை முதல் மதியத்திற்கு முன்பு வரை 200 பேருக்கு அபராத சலான் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஷ்ரா இன்று அரசு பேருந்தில் தலைமைச் செயலகத்திற்கு சென்றார். முதல்வர் கெஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராயின் டாடா நானோ காரில் தலைமைச் செயலகத்திற்கு சென்றனர்.
In Delhi, Your number plate is the new cleavage today, everyone checking it out.
— Gabbbar (@GabbbarSingh) January 4, 2016 இந்நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு பற்றி கப்பார் என்பவர் கூறியிருப்பதாவது,
டெல்லியில் நம்பர் பிளேட் தான் புதிய கிளீவேஜ். அனைவரும் அதையே தான் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Metro coming out of Rajiv Chowk pic.twitter.com/f0FGwh0u2K
— Arnab Goswami (@3DArnab) January 4, 2016 இரட்டைப் படை எண் கொண்ட கார்கள் இல்லாதவர்கள் இன்று அரசுப் பேருந்து, ஆட்டோ, டாக்சி, மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். மெட்ரோக்களில் இன்று கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
கார் பெருக்கத்திற்காக இப்படி விட்டத்த பார்த்து யோசிச்ச அரவிந்த் கெஜ்ரிவால், நல்லவேளை மக்கள் தொகை பெருக்கத்திற்காக யோசிக்கல
— ஆல்தோட்டபூபதி (@thoatta) January 1, 2016 நல்ல வேளை
கார் பெருக்கத்திற்காக இப்படி விட்டத்த பார்த்து யோசிச்ச அரவிந்த் கெஜ்ரிவால், நல்லவேளை மக்கள் தொகை பெருக்கத்திற்காக யோசிக்கல என பூபதி ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications