இளசுகளையும் விட்டுவைக்காத பட்ஜெட்.. இனி எந்த மாடல் போனுக்கு என்ன விலை தெரியுமா?
2018 பட்ஜெட் காரணமாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் விலை அதிகமாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: பட்ஜெட்டின் போது மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் அதிகமாக கருத்தில் கொள்ளப்படும். அதுபோல்தான் இளசுகளின் அத்தியாவசிய தேவைகளான மொபைல் விலை மாற்றமும் கவனித்தில் கொள்ளப்படும்.
இந்த பட்ஜெட்டுக்கு முன் பலரும் மொபைல், டேப்லெட், கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் விலை குறையும் என்று கணித்து இருந்தார்கள். முக்கியமாக மொபைல்களின் விலை குறையும் என கூறப்பட்டது.
ஆனால் மொபைல்களின் விலை தற்போது அதிகம் ஆகி இருக்கிறது. எல்லா விதமான எலக்ட்ரானிக் பொருட்களின் விலையும் அதிகம் ஆகியுள்ளது.

மாற்றம் கிடையாது
தற்போது மொபைல்களில் இறக்குமதி வரி 15 சதவிகிதம் இருக்கிறது. டேப்லெட்களில் 18 சதவிகிதம் இருக்கிறது. இதன் காரணமாக நல்ல மாடல் மொபைல்கள் 7000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

எதிர்பார்ப்பு
இந்த வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி பழைய 5 சதவிகித வரி மட்டுமே இனி விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதனால் 2-3 ஆயிரம் வரை போன்களின் விலை குறையும் என்று கூறப்பட்டது.

உண்மை
ஆனால் தற்போது மொபைகளின் இறக்குமதி வரி 15ல் இருந்து அதிகமாக்கப்பட்டு இருக்கிறது. இனி 20 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது இன்னும் மொபைல்களின் விலையை அதிகரிக்கும்.

மாடல்
இதன் காரணமாக ஆண்ட்ராய்ட் போன்களின் விலை உச்சத்தை அடையும். 3000 ஆயிரம் வரை போன்களின் விலை அதிகம் ஆகும். அதேபோல் ஆன்லைன் மூலம் வாங்கப்படும் போன்கள் விலை அதிகம் ஆகும். இந்திய மாடல் போன்களின் விலையில் மாற்றம் இருக்காது.












Click it and Unblock the Notifications