ஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க!
21 வயது பெண்ணை 65 வயது முதியவர் மணந்து கொண்டார்.
Recommended Video

பாட்னா: பல நேரங்களில் நிஜ வாழ்க்கையும் சினிமா போலவே இருக்கிறது. சில நேரங்களில் சினிமாவை மிஞ்சுவதாகவும் இருக்கிறது!!
பாட்னா பகுதியில் சமஷ்டிபூர் என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ரோஷன் லால். 65 வயதான இவர் தன் செல்ல மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார். ஒருவழியாக அதே பகுதியில் வசித்து வரும் ஸ்வப்னாவை தன் மகனுக்கு பேசி முடித்தார். ஸ்வப்னாவுக்கு 21 வயது ஆகிறது. இரு வீட்டிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
[மற்றவர்கள் மூச்சை காப்பாற்றினார்.. தன் உயிரை விட்டார்.. ஸ்வாதியின் பரிதாப முடிவு]

தடபுடல் ஏற்பாடு
தடபுடல் ஏற்பாடுகள் நடக்க தொடங்கியன. ஊர் முழுக்க பத்திரிகைகளை இரு வீட்டாரும் கொடுத்தனர். கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரு வீடுகளுமே விழாக் கோலம் பூண்டது. கல்யாணத்துக்கு ஆட்கள் வர ஆரம்பித்தனர். களை கட்டியது கல்யாண மண்டபம்!!

விழித்த பெற்றோர்கள்
மணமகள் ஆயிரம் கனவுகளுடன் அலங்கார கோலத்தில் இருந்தார். ஆனால் மாப்பிள்ளையை காணோம். எல்லா இடமும் தேடி தேடி பார்த்தார்கள்... கடைசியில் பார்த்தால், மாப்பிள்ளை தன் காதலியுடன் ஊரைவிட்டே எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். என்ன செய்வதென்றே தெரியாமல் இரு வீட்டு ஆட்களும் முழித்தார்கள்.. கல்யாணத்துக்கு ஆட்களோ பரிசு பொருட்களுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.

அசிங்கம்.. அவமானம்..
என் மகன் தப்பு செய்துட்டான், அதனால இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று மாப்பிள்ளையின் அப்பா ரோஷன்லால் சொன்னார். ஆனால் பெண் வீட்டிலோ, "இவ்வளவு ஏற்பாடு நடந்தாச்சு, எல்லாரையும் வரவழைச்சிட்டோம், கல்யாணத்தை நிறுத்தினா எங்களுக்கு அசிங்கம்" என்றார்கள். சரி.. அதற்கு என்னதான் செய்யது என்று கேட்டார் மாப்பிள்ளையின் அப்பா.

கவுரவம்.. கவுரவம்
அதற்கு பெண் வீட்டாரோ, "பேசாமல் நீங்களே என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்குங்களேன்" என்று சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரோஷன்லால், மறுத்தார். ஆனாலும் பெண் வீட்டில் அவரை வற்புறுத்தி கெஞ்சி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் வேறு வழியின்றி 65 வயதான ரோஷன்லால், மருமகளாக வரப்போகிற 21 வயது ஸ்வப்னாவுக்கு தாலி கட்டினார். 'கவுரவம்... கவுரவம்..ன்னு பேசி பேசியே, கடைசியில் ஸ்வப்னா வாழ்க்கையை இப்படி ஆக்கிட்டாங்களே' என்று கல்யாண கோஷ்டியினர் ஆடிப்போய்விட்டனர்!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications