வெறும் 66 ஓட்டு.. 22 தொகுதிகளில் மிகவும் குறைவான வித்தியாசம்! இது மத்திய பிரதேச ரிசல்ட் நிலவரம்!
போபால்: மத்திய பிரதேசத்தில் 2,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் பல தொகுதிகளில் காங்கிரஸை விட முன்னிலையில் உள்ளது பாஜக.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தை தவிற மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக 161 இடங்களிலும், காங்கிரஸ் 67 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இவற்றில் 40 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதில் 30 தொகுதிகளில் பாஜகவும், 10 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், மத்திய பிரதேசத்தில் முன்னிலையில் உள்ளவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 2000-த்திற்கும் குறைவாக உள்ளன. இதனால், எந்தச் சுற்றிலும் நிலைமை மாறலாம் என்ற சூழல் உள்ளது. பாஜக முன்னிலையில் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ள 11 தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
காங்கிரஸுக்கு “ஜன கண மன”? கையில் இருந்த ரெண்டு போச்சு.. அடி மேல் அடி.. இந்த லிஸ்ட்டை பாருங்க!
அதிலும் குறிப்பாக, பாஜக வேட்பாளர்கள் ஓம்பிரகாஷ் சக்லேச்சா 251 வாக்குகள் வித்தியாசத்திலும், சாஜாபூர் பாஜக வேட்பாளர் அருண் பீமாவத் 150 வாக்குகள் வித்தியாசத்திலும், குன்னார் தொகுதி பாஜக வேட்பாளர் ராஜேஷ் குமார் வர்மா 151 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளனர். மஹித்பூர் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் ஜெயின் பாஸ் வெறும் 66 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications