ஆந்திராவில் ஹிராகந்த் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 23 பேர் பலி
ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திராவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to Oneindia Tamil
புவனேஷ்வர்: ஆந்திரா மாநிலம் குனேரு ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முதலில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

நேரம் செல்லச் செல்ல பலி எண்ணிக்கை அதிகரித்தது. இப்போதய நிலவரப்படி தற்போது 23 பேர் பலியாகியுள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகாடா மற்றும் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகள் செய்ய விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட மொத்த சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications