Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபாநாயகர் மூலம் 236 எம்பிக்கு செக்! வியூகம் வகுக்கும் மோடி? இந்தப் பதவிக்கு இவ்வளவு பவரா?

Subscribe to Oneindia Tamil

18 ஆவது மக்களவைக்கு யார் சபா நாயகர் பதவியில் அமரப் போகிறார் என்ற கேள்வி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக சார்பாக மீண்டும் ஓம் பிர்லா இந்தப் பதவிக்குப் போட்டியிடலாம் என்று தகவல் கசிந்து வருகிறது. இந்தப் பதவிக்கு 'இந்தியா' கூட்டணி சார்பில் யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

ஆனால், துணைச் சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி கூறிவருகிறார். இதுவரை மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பது பற்றி ஒரு நிலையற்ற தன்மைதான் நிலவி வருகிறது.

Lok Sabha Speaker

ஒருவேளை மீண்டும் ஓம் பிர்லாவை இந்தப் பதவிக்கு என்டிஏ பரிந்துரைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருவர். பிர்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் போட்டியிட்டால் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

பாஜக 2014 மற்றும் 2019 ஆட்சிக்காலத்தில் முரட்டு பலத்துடன் இருந்தது. எனவே சுமித்ரா மகாஜனையும் ஓம் பிர்லாவையும் இப்பதவியில் நியமிப்பதில் சவால்கள் இருக்கவில்லை. இந்த பாஜகவிடம் பெரும்பான்மை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 240 சீட்டுகளுடன் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு 32 சீட்டுகள் குறைவாக உள்ளது. அதனால்தான் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவில் ஆட்சியை மூன்றாவது முறையாக தக்கவைத்துள்ளார் மோடி.

இந்த சபாநாயகர் பதவி என்பது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? இதை வைத்து மோடியால் எதிர்க்கட்சிகளை எப்படி காலி செய்ய முடியும்? கடந்த ஆட்சிக்காலத்தில் மோடி சபாநாயகரை வைத்து எப்படிக் காய் நகர்த்தினார்? அது பற்றிப் பல விசயங்களை உடைத்துப் பேசியுள்ளார் பத்திரிகையாளர் மணி.

சபாநாயகரை வைத்து எதிர்க்கட்சிகளை மோடியால் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட முடியும் என்ற உண்மையை சில உதாரணங்களைக் காட்டி விளக்கியுள்ளார் அவர். மணி பேசுகையில், "மிக முக்கியமான விசயம் சபாநாயகர் பதவி. இன்று வேட்பாளர் யார் என்பதை மோடி அறிவிப்பார் எனத் தெரிகிறது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாகச் சபாநாயகரை தேர்வு செய்வதற்கு முன்பாக எதிர்க்கட்சியை ஆளும் கட்சி கலந்தாலோசிக்கும். அதுதான் மரபு. ஆனால், இதுவரை மல்லிகார்ஜுன கார்க்கேவை யாரும் சந்தித்துப் பேசவே இல்லை. வெளியில் என்ன தகவல் கசிந்து வருகிறது என்றால், தெலுங்கு தேசம் அந்தப் பதவியைக் குறிவைத்துள்ளது என்று. ஆனால், பாஜக மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சபாநாயகர் பதவி ஆளும் கட்சிக்குப் போனால், துணை சபா நாயகர் பதவி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வேண்டும். அப்படி தர மறுத்தால், தேர்தலைச் சந்திப்பார்கள்.

கடந்த கால மொத்தம் 17 மக்களவை வரலாறு என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும்? கடந்த 17 மக்களவை வரை சபாநாயகர் பதவிக்கு தேர்தலே நடந்தது இல்லை. அப்படி நடந்தால் இதுதான் முதன்முறை. இது நடந்தால் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். சபாநாயகர் என்பது நடுநிலையானவர். ஆகவேதான் நேரு காலம் தொடங்கி எதிர்க்கட்சியினரை ஆலோசித்து அந்தப் பதவியில் ஒருவரை அமரவைக்கிறார்கள்.

ஆகவேதான் இது முக்கியமான பதவி. மோடி ஜனநாயகத்தை நம்புகிறார் என்றால், அவரது செயலில் அது வெளிப்பட்ட வேண்டும்? இந்த அரசு எப்படி நடுநிலையாக இருக்கப் போகிறது என்பதற்கு இதுதான் முதல் பரீட்சை. ஒருவேளை தேர்தல் வந்தால் 'இந்தியா' கூட்டணிதான் வெற்றி பெறும். அது என்ன செய்தியை நாட்டு மக்களுக்குச் சொல்லும்? அதை மோடி யோசிக்க வேண்டும்.

Lok Sabha Speaker

பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகராக வந்தால், ஒரு விபரீதம் உள்ளது. கடந்த ஆட்சியின் போது 143 எம்பிகளை வெளியே தூக்கிப் போட்டதைப் போல இப்போது உள்ள 236 பேரையும் தூக்கிப் போடுவார்கள். எனது பேச்சைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் வருங்காலத்தில் நடக்கும். கட்சிகளை உடைப்பது, கட்சித் தாவல் பற்றி எல்லாம் சபாநாயகர்தான் முடிவு எடுப்பார். அதிகாரம் அவரிடம் தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் சில மசோதாக்களை அவர் விவாதமே இல்லாமல் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு அதிகாரம் உள்ளது.

இன்றுடன் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த நெருக்கடி நிலையின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடன் சிறையிலிருந்தவர் நிதிஷ்குமார். அவர் போய் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடியின் காலில் விழுகிறார். அவரால் 12 எம்பிகளை வைத்துக் கொண்டு ஒன்று செய்துவிட முடியாது.

பாஜகவின் 78 எம்.எல்.ஏக்கள் தான் அவரை பீகார் முதல்வராக வைத்துள்ளார்கள். இவர் இங்கே ஆடினால், அங்கே ஒன்றுமே இல்லாமல் போய்விடுவார். ஆக, தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவை நம்பித்தான் ஆட்சி நடத்தி வரவேண்டும்" என புதிய கோணத்தில் விளக்கம் அளித்துள்ளார் மணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+