24 எம்எல்ஏக்கள் கூடுதலாக எனக்கு ஆதரவு கொடுப்பார்கள்.. எடியூரப்பா பரபரப்பு பேட்டி
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன், நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று எடியூரப்பா
Recommended Video

பெங்களூர்: பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன், நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து முதல்வராக பதவியேற்று இருக்கும் எடியூரப்பா பேட்டி அளித்துள்ளார். அதில் பெரும்பான்மை பெறுவேன் என நம்பிக்கையுள்ளது என்றுள்ளார்.
எங்களிடம் 104 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு சுயேச்சை எம்எல்ஏ எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முடிவு தெரியும்.
மனசாட்சிபடி வாக்களியுங்கள் என எம்எல்ஏக்களை கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். இன்னும் 24 எம்எல்ஏக்கள் மனசாட்சி, மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப வாக்களிப்பார்கள்.
104க்கும் அதிகமான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், 15 நாட்கள் அவகாசம் இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன், நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும், என்று நம்பிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications