69 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 24 வயது வாலிபர்!
பெங்களூரு: 69 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 24 வயது கட்டுமான தொழிலாளியை குற்றவாளி என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் 69 வயது மூதாட்டி. இவரது இரு மகள்களும் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், மகன் மங்களூருவின் வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலைியல் மூதாட்டியின் வீட்டுக்கு பக்கத்தில் அவரது மகளுக்காக ஒரு வீடு கட்டப்பட்டு வந்தது. இந்த வீட்டின் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தவர் நாகேஷ் (24).
கட்டிட தொழிலாளிகளுக்காக பக்கத்தில் கட்டப்பட்டிருந்த தற்காலிக ஷெட்டில் நாகேஷும் தங்கியிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை 14ம்தேதி, இரவு 7.15 மணிக்கு நாகேஷ் திடீரென பெண்மணி வீட்டு கதவை தட்டியுள்ளார். தொழிலாளிதானே என்று நினைத்து அந்த பெண்ணும் கதவை திறந்தார். அரிவாளுடன் உள்ளே புகுந்த நாகேஷ் கதவை மூடிவிட்டு, மூதாட்டியை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.
தனக்கு வயதாகிவிட்டதையும், நோய் பிரச்சினைகள் இருப்பதையும் கூறி தன்னை விட்டுவிடுமாறு அந்த பெண் கெஞ்சியும், நாகேஷ் அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, மூதாட்டியின் உதடு, முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், ரூ.5.500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு நாகேஷ் தப்பிவிட்டார்.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூரை அடுத்த நாகேஷின் சொந்த ஊரான சிந்தாமணியில் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட ஆறாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி, நாகேஷை குற்றவாளி என்று அறிவித்துள்ளார். தண்டனை விவரத்தை செவ்வாய்க்கிழமை அறிவிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications