தங்கம் வென்ற வீராங்கனை.. கழுத்தில் விழுந்த 270 கிலோ.. எமனாக மாறிய விளையாட்டு பயிற்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 18 தேதி அன்று பவர் லிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பியை தூக்கிய போது, தவறி விழுந்து கழுத்து உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் ஜூனியர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பவர் லிஃப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா (17 வயது) ஜிம்மில் செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 18 அன்று) பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பயிற்சியாளர் உதவியுடன் 270 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யஷ்டிகா ஆச்சார்யா தலைக்கு மேல் 270 கிலோ எடையை தூக்க முயன்ற போது, கை தவறியது.
அப்போது பயிற்சியாளரும் வாங்க முயற்சித்தார். ஆனால் அவரால் வாங்க முடியவில்லை.. இதனால் யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்தின் பின்பக்கம் அப்படியே மொத்த எடையும் விழுந்தது.இதில் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்து நரம்பு உடைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் யஷ்டிகா ஆச்சார்யா மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பவர் லிஃப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார். அவருக்கு நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
பவர் லிஃப்டிங் என்பது ஒரு வலிமையான விளையாட்டு ஆகும். இதில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் என்ற மூன்று லிஃப்ட்களில் அதிகபட்ச எடையை தூக்கும் விளையாட்டு ஆகும் . இந்த விளையாட்டு ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக இல்லை..

விளையாட்டுகளில் ஏற்படும் விபத்துகள், அரிதானவை ஆகும். எனினும் கடந்த காலங்களில் விபத்துக்கள் நடந்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியூஸ், 2014 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது பவுன்சர் பந்து தாக்கியதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications