பிறப்புறுப்பில் 28 தையல்.. 17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. கொடூரத்தின் உச்சம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்து தலையை தரையில் முட்டி கொல்ல முயன்ற வழக்கில் 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பிறப்புறுப்பில் 28 தையல்கள் போடப்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தை சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இவன் வீட்டுக்கு அருகே 5 வயது நிரம்பிய சிறுமி வசித்து வருகிறார். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அண்ணன் என்ற முறையில் 5 வயது நிரம்பிய சிறுமி 17 வயது சிறுவனுடன் பேசி வந்தார்.

இந்நிலையில்தான் அந்த சிறுவன் மனதில் தவறான எண்ணம் உதித்துள்ளது. சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கி உள்ளார். இதனால் சிறுமியிடம் அவர் நெருங்கி பழக தொடங்கி உள்ளார்.
கடந்த 22ம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சிறுவன் சென்றான். அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் சிறுமியை அருகே யாரும் வசிக்காமல் இருக்கும் வீட்டின் மொட்டைமாடிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோது அவரது தலையை தரையில் முட்ட வைத்து கொலை செய்ய முயன்றுள்ளான். உடலில் இருந்து ரத்தம் வந்த நிலையில் சிறுமி திடீரென்று மயங்கி உள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டான். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்த சிறுமி ரத்தம் வடிய வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாக சிறுமியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அது முதலுதவி சிகிச்சையாகும்.
சிறுமியின் பிறப்புறுப்பில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமி குவாலியரில் உள்ள கமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், ‛‛சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தான் நினைத்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. பிறப்புறுப்பில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார்'' என்றார்.
இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவர் சிறுவர்களுக்கான கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கொடூரமான தவறை செய்த சிறுவனுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஒன்றாக சேர்ந்துள்ளனர். தவறு செய்த சிறுவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சிவபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications