மும்பை காவல் நிலையத்தில் மாடல் அழகி பலாத்காரம்: 3 போலீசார் கைது
மும்பை: மும்பை காவல் நிலையத்தில் 29 வயது மாடல் அழகி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 போலீசார், ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 வயது மாடல் அழகி ஒருவர் கடந்த 4ம் தேதி நேர்காணலில் கலந்து கொள்ள மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அவரை போலீசார் வழிமறித்து தங்கள் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி அந்தேரி பகுதியில் உள்ள சகிநாகாவில் இருக்கும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் வைத்து அந்த பெண் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு அவரை வெளியே விட ரூ.4.5 லட்சம் பணம் கேட்டுள்ளனர் போலீசார். இதையடுத்து அந்த மாடல் அழகியின் நண்பர் நள்ளிரவில் பல ஏடிஎம் மையங்களுக்கு சென்று ரூ.4.5 லட்சம் பணத்தை எடுத்து வந்து போலீசாரிடம் அளித்துள்ளார். அதன் பிறகே போலீசார் அந்த மாடலை வெளியே விட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி ஊரை விட்டே சென்றுவிட்டார். பின்னர் நடந்த சம்பவம் பற்றி மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு அவர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதையடுத்து மரியா மாடல் அழகியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நடந்தது பற்றி கேட்டறிந்து உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பலாத்காரம், மிரட்டி பணம் வாங்கியது தொடர்பாக 2 துணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள், ஒரு பெண் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications