2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ஆ.ராசா வாக்குமூலம் பதிவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற நோக்குடன் தவறு செய்தல், ஊழல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் மீது நடைபெற்று வரும் இறுதிகட்ட விசாரணை இன்று மீண்டும் தொடர்கிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகி தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் இன்று முதல் ஆஜராகி வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும், கலைஞர் டி.வி. பண பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீது, வரும் 26-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2ஆம் தேதி சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications