நாடே எதிர்பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி 3-ஆவது முறையாக ஒத்திவைப்பு!
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதியை இன்று மூன்றாவது முறையாக நீதிபதி ஓ.பி.ஷைனி ஒத்தி வைத்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 25-ந் தேதி முடிவடைந்தது. அன்றைய தினம் தீர்ப்பு தேதியை அறிவிக்காமல் நீதிபதி ஓ.பி.ஷைனி ஒத்தி வைத்தார்.
பின்னர் ஆகஸ்ட் 25-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார் நீதிபதி ஓபி ஷைனி. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து செப்டம்பர் 20-ஆம் தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி கூறியிருந்தார். அன்றைய தினமும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் அக்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு தேதிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை சேர்க்க தாமதம் ஆகிவிட்டதால் வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பை வரும் நவம்பர் 7-ல் வெளியிடுவதாக நீதிபதி ஷைனி தெரிவித்திருக்கிறார்.
நாடே பெரிதும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications