கலைஞர் டி.வி. தொடங்கியதில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு: 2ஜி வழக்கில் ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம்!
டெல்லி: கலைஞர் டி.வி. தொடங்கப்பட்ட நடவடிக்கையில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி கொடுத்த பண பரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி நேற்று ஆஜராகி அளித்த சாட்சியம்:
ஆ. ராசாவிடம் பணியில் இருந்த போது, அவரது தொகுதி சார்ந்த விஷயங்கள், அவரது அரசியல் விவகாரங்கள் தொடர்பான பணிகளைக் கவனித்தேன். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராகவும், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகவும் ராசா இருந்த போது அவரைச் சந்திக்க வினோத் கோயங்கா, ஷாஹித் உஸ்மான் பால்வா ஆகியோர் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்துக்கு வந்து செல்வர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கும், சன் குழும நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனுக்கும் இடையே 2007 மே மாதத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதன் காரணமாக கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள், திமுகவுக்கு என தனி தொலைக்காட்சி அவசியம் தொடங்க வேண்டியது என்று முடிவு செய்து, அதன் பேரில் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது.
அத்தொலைக்காட்சியைத் தொடங்கும் ஆரம்பநிலைப் பணிகளுக்காக அதன் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான சரத்குமார், ராசாவின் டெல்லி வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பல முறை வந்து செல்வதைக் கண்டுள்ளேன். அப்போதைய மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியை தொடர்பு கொண்டு கலைஞர் டிவிக்கான உரிமங்களை விரைவாகப் பெறும் முயற்சியில் ஆ.ராசா ஈடுபட்டார்.
கனிமொழியும் ராசாவின் வீட்டில் உள்ள அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து செல்வார். மத்திய தொலைத்தொடர்பு துறை அலுவலகத்துக்கும் அவர் வந்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் அவர் முக்கியப் பங்காற்றினார். அத்தொலைக்காட்சியில் அவரது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
இவ்வாறு ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம் அளித்தார். இதையடுத்து ஆசீர்வாதம் ஆச்சாரியிடம், வினோத் கோயங்கா, சரத் குமார் ஆகியோரின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
முன்னதாக, கனிமொழி சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், ரெபேக்கா ஜான், கலைஞர் டிவி தொடங்க கனிமொழி முக்கியப் பங்காற்றினார் என்று கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு. எவ்வாறு இப்படி குறிப்பிட்டீர்கள்?' என்று ஆசீர்வாதம் ஆச்சாரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு "கலைஞர் டிவியின் ஆவணங்களை எல்லாம் நான் பார்த்ததில்லை. ஆனால், அத்தொலைக்காட்சியைத் தொடங்க கனிமொழி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்' என்று பதிலளித்தார்.
மேலும் பாஜகவில் இணைந்துள்ள நீங்கள் அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியின் ஆலோசனைப்படிதான் இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கிறீர்கள். அரசியல் ஆதாயத்துக்காக நீங்கள் சாட்சியம் அளிக்க வந்துள்ளதாக ஏன் கருதக் கூடாது?' என்று ரெபேக்கா ஜான் கேட்டார். அதற்கு ஆசீர்வாதம், அரசியலில் சேர வேண்டும் என்ற லட்சியம் முன்பே இருந்தது. சுப்பிரமணியன் சுவாமியை நீண்ட நாள்களாக அறிவேன். அவர் இடம்பெற்றுள்ள பாஜகவில் கடந்த ஏப்ரலில்தான் இணைந்தேன். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக இவ்வழக்கில் நான் சாட்சியம் அளிக்கவில்லை என்றார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமாரின் வழக்கறிஞர் பாலாஜி சுப்பிரமணியன் ஆசீர்வாதத்திடம் கேள்விகளை கேட்டார். அதற்கு ஆசீர்வாதம் அளித்த பதிலைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications