அஸ்ஸாமில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.5 ஆக பதிவு!!
அஸ்ஸாம்:நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பலியான நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.5 அலகுகளாகப் பதிவாகி இருந்ததால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகக் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரம் பேர் பலியானார்கள்.
அதே நாளில் இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 90 பேர் பலியாகினர்.

அதன் பின்னர் தொடர்ந்து நேபாளத்தில் பலமுறை பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் இந்த பின் அதிர்வுகள் அவ்வப்போது உணரப்படுகிறது.
இதனிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று அதிகாலை மீண்டும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.
சோனித்பூர் மாவட்டத்தின் 28.8 டிகிரி வடக்கிலும் 92.5 டிகிரி மேற்கிலும் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்திலும் இது மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கத்தால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications