காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் 3 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பலி: 6 பேர் படுகாயம் !
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் வீரர்கள் சிலர் விடுப்பில் சென்றிருந்தனர். இந்நிலையில் விடுமுறை முடிந்த வீரர்கள் இன்று பணிக்கு திரும்பினர். இதற்காக 23 வாகனங்களில் அவர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

மாலை 4.30 மணியளவில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பிஜ்பெஹரா அருகே வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் வாகனங்களில் வந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ஷர்மா சம்பவ இடத்திற்கு விரைந்தார். மத்திய ரிசர்வ் படை மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் வீரர்கள் அடங்கிய கூடுதல் படையும் விரைந்தது.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் புர்ஹான் வானி தலைமையிலான ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications