உ.பியில் சாலை விபத்து.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் மரணம்
உ.பி சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேசம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
உ.பி அருகே உள்ள மதுரா நெடுஞ்சாலையில் இன்று காலை சாலை விபத்து நிகழ்ந்து இருக்கிறது. டெல்லியை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மருத்துவ பணி ஒன்றிற்காக உத்தர பிரதேசம் சென்று உள்ளார்கள்.

யமுனா அதிவிரைவுசாலையில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த வாகனம் நிலை தடுமாறி இவர்கள் காரில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 3 மருத்துவர்களும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
இவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications