ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சி: ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நாக்பூரில் கைது!!
நாக்பூர்: உலகின் மிக கொடூரமான ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மகாராஷ்டிராவின் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சிக்கும் இந்திய இளைஞர்களின் கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் புனேவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியிருந்தார். ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற 11 சிறுவர்கள் சிக்கினர்.

தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து பிடிபட்டிருந்தனர். இந்நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 மாணவர்களைக் காணவில்லை என புகார் கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை தெலுங்கானா போலீசார் மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாக்பூர் அம்பேத்கர் விமான நிலையத்தில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் செல்வதற்காக காத்திருந்த போது காணாமல் போன 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்திருந்தது தெரியவந்தது.
அதாவது ஜம்மு காஷ்மீர் சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். இயக்கத்துடன் இணைய இருந்தனராம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 மாணவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications