பவானி சிங் மீது சந்தேகம் உள்ளது.. ஆஜராகக் கூடாது... 3 நீதிபதிகள் முன்பு அன்பழகன் வக்கீல் வாதம்
டெல்லி: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் சரிவர அவர் ஆஜராகவில்லை. மேலும் அவருக்கு ஜாமீனையும் அவர் எதிர்க்கவில்லை. எனவே அவர் ஆஜராகக் கூடாது என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் ஆஜரான அன்பழகன் வழக்கறிஞர் அந்தியர்ஜூனா வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியுள்ளது.

அப்பீல் வழக்கு
சொத்து வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் செய்துள்ளார். தனி நீதிபதி குமாரசாமி முன்பு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்துள்ளார்.

பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு
இந்த நிலையில் அப்பீல் விசாரணையில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்றும் வேறு வழக்கறிஞரை நியமிக்க கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இருவேறு தீர்ப்புகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, மதன் பி.லோகூர் அடங்கிய அமர்வு இரு வேறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை
இன்று அன்பழகன் மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியது. அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியர்ஜுனா ஆஜராகி வாதாடினார்.அப்போது நீதிபதி பந்த் அவரிடம், ஒரு வழக்கில் அரசு வக்கீல் நியமனத்தை தனி நபர் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்றார்.

கர்நாடகாவிற்கு வழக்கு மாற்றம்
அதற்கு வக்கீல் அந்தியர்ஜுனா பதில் அளிக்கையில், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்ற காரணமாக இருந்தவரே அன்பழகன்தான் என்றார்.

பவானிசிங்கின் செயல்பாடு எப்படி
தொடர்ந்து நீதிபதி அவரிடம், ஒவ்வொரு முறையும் அரசு வழக்கறிஞர் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? விசாரணை நீதிமன்றத்தில் பவானிசிங் எப்படி செயல்பட்டார்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்தியார்ஜூனா, பவானி சிங் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. அவர் விசாரணையில் ஆஜராகாமலும், ஜாமீனை எதிர்க்காமலும் செயல்பட்டார் என்றார்.

விசாரணை ஒத்திவைப்பு
காலை தொடங்கி பிற்பலிலும் அன்பழகன் வழக்கறிஞர் அந்தியார்ஜூனா வாதிட்டார். ஜெயலலிதா சார்பில் பாலி நாரிமன் வாதிட்டார். விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications