2 பைலட் உள்பட 3 பேர் பலி.. குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சியின்போது கடலோர காவல் படைக்கு செந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட் உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் தற்போது பயணிகள் விமானம் என்பது இயக்கப்படுவது இல்லை. இந்த விமான நிலையத்தை இந்திய விமானப்படையின் விமானங்கள் உள்பட பிற படைப்பிரிவுகளை சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தான் பயன்படுத்தி வருகின்றன.

gujarat helicopter

அரபிக்கடல் பகுதியையொட்டி இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இதனால் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தான் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதாவது இன்று வழக்கமான பயிற்சியின்போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டரில் 2 பைலட் உள்பட 3 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் உடனடியாக விரைந்து மீட்டு பணியை தொடங்கினர். ஆனால் அதற்குள் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட் உள்பட 3 பேரும் இறந்துள்ளனர். இதுபற்றி இந்திய கடலோர காவல்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, ‛‛இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் விபத்தில் சிக்கியது. இது வழக்கமமான பயிற்சி பணியின்போது விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் உள்பட 3 பேர் பயணித்தனர். இந்த 3 பேரும் மரணடைந்துள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் என்ன?என்பது உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த போர்பந்தர் பகுதியில் கடலோர காவல்படையின் விமானம் இப்படி விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய கடலோர காவல்படையின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானிகள் விபின் பாபு, ராகேஷ் ராணா, டைவர்கள் கரண் சிங் உள்ளிட்டவர்கள் இறந்தனர். டைவர் கவுதம் குமார் மீட்கப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+