3 எம்எல்ஏக்கள்... 50 கவுன்சிலர்கள்.. வளைத்து போட்ட பாஜக.. மமதாவுக்கு நெருக்கடி!
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மமதா மீது அதிருப்தியில் இருந்த 3 எம்எல்ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்களை பாஜக தன்பக்கம் இழுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில் பாஜக அங்கு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பிரச்சாரத்தின் போதே பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸின் மமதா பானர்ஜிக்கும் பெரும் வார்த்தை போர் நிலவியது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி கொண்டனர்.

கட்சியினருக்கு வெறுப்பு
தேர்தல் நேரத்தில் மமதாவின் பேச்சும் செயல்பாடும் அக்கட்சியினருக்கே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றார் போல் தேர்தல் முடிவும் பாஜகவுக்கு ஆதரவாக வந்தது.

பாஜகவில் இணைந்தனர்
மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு மமதா பானர்ஜி மீதான அதிருப்திதான் காரணம் என பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஒருவர் என 3 எம்எல்ஏக்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

முகுல்ராயின் மகன்
டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த மூன்று எம்எல்ஏக்களில் ஒருவர் பாஜக மூத்த தலைவர் முகுல் ராயின் மகன் ஆவார்.

பயன்படுத்தும் பாஜக
மமதா பானர்ஜி மீதுள்ள அதிருப்தியால் 3 எம்எல்ஏக்கள் 50 கவுன்சிலர்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ளனர். இதனை பாஜகவும் சரியாக பயன்படுத்தி வருகிறது.

கலக்கம்
பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி 40 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். இந்நிலையில் 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருப்பது மமதா பானர்ஜி தரப்பை கலக்கமடைய செய்துள்ளது.

சட்டசபை
அடுத்தக்கட்டமாக மேற்கு வங்க உள்ளாட்சியை கைப்பற்றவேண்டும், அதன்வாயிலாக மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications