காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெறுவதால் ஸ்ரீநகரில் பாதுகாப்புக்காக எப்போதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீநகர் அருகே உள்ள சடிபால் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த துணை சப்-இன்ஸ்பெக்டர் குலாம் முகமது மற்றும் நாசிர் அகமது ஆகியோர் ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

நேற்று காலை சுமார் பத்தரை மணியளவில் அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயடைந்த போலீசார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், காஷ்மீரின் அடித்தட்டு மக்கள் அமைப்பு ஒன்றின் தலைவரான முகமது அப்துல்லா சத்வால் என்பவருக்கு பாதுகாவலராக முகமது சாதிக் என்ற காவலர் பணியாற்றி வந்தார். இவர்கள் நேற்று மதிய வேளையில் டெங்போரா பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் முகமது சாதிக் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் காயமடைந்த முகமது சாதிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதலுக்கு, ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது போல மேலும் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அந்த தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீநகரில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications