தலை இல்லாத 3 வயது குழந்தை.. பிளாஸ்டிக் பையில் சடலம்.. சிதைத்து நாசம் செய்த 3 பேர் கைது
3 வயது குழந்தையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்
Recommended Video
ஜாம்ஷெட்பூர்: 3 வயசு குழந்தையின் தலையில்லா உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு, அதன் தலையை தேடி வருகிறார்கள் போலீசார்!
ஜார்க்கண்ட் மாநிலம் தடாநகர் ரயில்வே ஸ்டேஷனில் போன செவ்வாய்கிழமை, பிளாட்பாரத்தில் தாயுடன் 3 வயசு குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
பிறகு தாய் கண் விழித்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் மாயமான குழந்தையை பல இடங்களில் தேடியும், கடைசியில் பெற்றோர் போலீசில் புகார் தந்தனர்.

குற்றவாளி
இதையடுத்து ரெயில்வே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தூங்கும் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து செல்வது கண்டறியப்பட்டது. இந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் குற்றவாளி யார் என்று விசாரித்தனர்.

திடுக் தகவல்
அவர் பெயர் ரின்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் மேலும் 2 பேருக்கு கூட்டு என்ற திடுக் தகவல் வெளியானது. குழந்தையை நாசம் செய்ததுடன், ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து 4 கிமீ தூரத்தில் ஒரு புதருக்கு பின்னால் போட்டுவிட்டனர்.

பலாத்காரம்
இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பையிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. ஆனால் தலை இல்லை. குழந்தையின் மர்ம பகுதியில் காயங்கள் இருந்தன. குழந்தையை பலாத்காரம் செய்து, அதற்கு பிறகு கழுத்தை நெரித்து.. அதற்கு பிறகு தலையையும் துண்டித்ததாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர்.

3 பேர் கைது
இதில் ரின்கு என்பவன் ஏற்கனவே இப்படிப்பட்ட கொடூரமான செயல்களை எல்லாம் செய்தவனாம். 2015-ம் வருஷம் 7 வயது குழந்தையை கடத்தி கொலையும் செய்து, ஜெயிலுக்கும் போனவனாம். 2 வருஷ ஜெயிலுக்கு பிறகு 2 வாரத்துக்கு முன்னாடிதான் ரிலீஸ் ஆகி உள்ளான். அடுத்தவாரமே இப்படி இன்னொரு மாபாதகத்தை செய்துள்ளான். இதையடுத்து ரின்கு மற்றும் உடனிருந்த கைலாஷ் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications