தெலுங்கானாவில் ஆழ்துளை குழாய் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி
மேடக்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒரு மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. மீட்பு குழுவினர் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தையில் உயிரை காப்பாற்ற முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேடக் மாவட்டம், புல்கல் மண்டலம், பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா 5, ராகேஷ்,3 ஆகிய இரண்டு மகன்கள். நேற்று காலையில் பாலய்யாவும், ராகேஷும் தங்களது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாட சென்றனர்.

அப்போது மூடப்படாத 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் ராகேஷ் தவறி விழுந்துள்ளான். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலய்யா அழுதுகொண்டே சென்று தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்துக்குச் சென்ற பெற்றோர், கயிறு மூலம் ராகேஷை வெளியே கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். ஆனால் சிறுவன் கீழே சரிந்து கொண்டே சென்று விட்டதால் , புல்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீஸார், வருவாய் துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்ததில், ராகேஷ், 33 அடி ஆழத்தில் தலைகீழாக சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகில் தோண்ட தொடங்கினர்.
மாலை 6 மணி வரை 9 அடி ஆழம் மட்டுமே தோண்ட முடிந்தது. இதற்குள் இடையே பாறாங்கல் வந்ததால் சில மணி நேரம் மீட்பு பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதனிடையே ராகேஷுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். இரவு முழுவதும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.
எனினும் குழந்தை தலைகீழாக இருந்த காரணத்தால், பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மீட்பு குழுவினர் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தையில் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனையறிந்த பெற்றோர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications