ஒடிசாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது... 30 கிராமியக் கலைஞர்கள் பலி - 10 பேர் காயம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 கிராமிய கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் தியோஹர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிராமியக் கலைஞர்கள் குழு ஒன்று பார்கர் மாவட்டத்தில் உள்ள ரேம்டா பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 40 இசைக் கலைஞர்கள் இருந்துள்ளனர்.

பேருந்து, திலேபானி காலோ மலைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 250 அடி ஆழம் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடம் கடினமான மலைப் பகுதியாகவும், அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருந்ததால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதாக தேவ்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாரா சர்மா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications