நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது: ராஜ்நாத்தை சந்தித்த பின் வைகோ பேட்டி
டெல்லி: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று டெல்லியில் ராஜ்நாத்தை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று சந்தித்து பேசினார். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது.

மதிமுக ஒருங்கிணைப்பு குழு
இரு கட்சிகளிடையேயும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றும் வருகிறது. சென்னை வண்டலூரில் நடைபெறும் மோடி பொதுக் கூட்டம் தொடர்பாக மதிமுக சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ராஜ்நாத்துடன் சந்திப்பு
இந்நிலையில் டெல்லி சென்றிருந்த வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்து பேசினார். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்வான சந்திப்பு- ராஜ்நாத்சிங்
இந்த சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராஜ்நாத்சிங், மதிமுக தலைவர் வைகோவை இன்று சந்தித்தேன். 2014 லோக்சபா தேர்தல் தொடர்பான இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்திருக்கிறார்.

மோடி அலை வீசுகிறது..
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications