சத்தமாக பாட்டு கேட்டதால் தகராறு: 30 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற ஜிம் மாஸ்டர்
டெல்லி: டெல்லியில் சப்தமாக பாட்டு கேட்டவரிடம் சப்தத்தை குறைக்குமாறு கூறிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப்(30). யுஜிசி நடத்தும் ஆய்வு நிறுவனமான இன்டர்-யூனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியர். ஹர்தீப் தனியார் தொலைக்காட்சி சேனலிலும் பணியாற்றி உள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு ஹர்தீப் தனது அபார்ட்மென்ட்டில் இருந்துள்ளார். அப்போது ஜிம் மாஸ்டரான ரிங்கு(27) என்பவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ஜிம்மில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு சப்தமாக பாட்டு கேட்டுள்ளார்.
ஹர்தீப் ஜிம்மிற்கு சென்று பாட்டின் சப்தத்தை குறைக்குமாறு ரிங்குவிடம் கூற அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ஹர்தீப் அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ரிங்கு தனது நண்பர்களுடன் ஹர்தீப்பின் அபார்ட்மென்ட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
ரிங்கு ஹர்தீப்பை அடித்து நொறுக்கியதுடன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். பின்னர் ரிங்கு தனது நண்பர்களுடன் தப்பியோடிவிட்டார். ஹர்தீப்பை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிங்குவை தேடி வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications