பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக 33 புகார்கள்... மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக 33 புகார்கள் வந்துள்ளது என லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பதஞ்சலி நிறுவனமும் டூத்பேஸ்ட், தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை. இயற்கையான உள்நாட்டுத் தயாரிப்பு என்ற பெயருடன் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரமும் அளிக்கப்பட்டது. இதனால் குறுகிய காலத்திலேயே அழகு சாதனப் பொருள்கள் சந்தையில் பதஞ்சலி தயாரிப்புகள் முக்கிய இடம் பெற்றன. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியச் சந்தை பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களில் போட்டி நிறுவனங்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு தகவல் பரப்புவதாக இருப்பதாக புகார் எழுந்தது. முக்கியமாக, பதஞ்சலி தயாரிப்பு கூந்தல் தைலம் இயற்கையானது. மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பதஞ்சலி ஆட்டா மாவு இந்தியாவின் "நம்பர் ஒன்' என்று மற்றொரு விளம்பரம் கூறுகிறது என தவறான தகவல்களை பரப்புவதாக போட்டி நிறுவனங்கள் புகார் அளித்தன.
இதை ஆய்வு செய்த இந்திய விளம்பரத் தர நிர்ணய கவுன்சில் பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எதிராக, கடந்த ஓராண்டில் மட்டும் 33 புகார்கள் வந்துள்ளன.
மத்திய நுகர்வோர் துறை அளித்த தகவலின்படி, பதஞ்சலியின் 17 விளம்பரங்கள் இந்திய விளம்பரத் தர நிர்ணய கவுன்சிலின் விதிமுறைகளை மீறும் வகையில் இருக்கிறது. பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள விளம்பரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்நிறுவனத்தின் 6 பொருட்கள் இந்திய விளம்பரத் தர நிர்ணய கவுன்சிலின் கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications