ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் கதி என்ன? தீவிரவாதிகளால் சுட்டுக் கொலையா?
டெல்லி: ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவுப் படையால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களின் கதி குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. முன்பு வெளியான செய்திகளின்படி கடத்தப்பட்டோரில் 39 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனரா? என்ற சந்தேகமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பானது ஈராக்கின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இந்த சதாம் ஆதரவுப் படை வடக்கு ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை அப்படை கைப்பற்றியுள்ளது.

18 ஆயிரம் இந்தியர்கள் பரிதவிப்பு
இதனால் ஈராக்கில் பணியாற்றி வரும் 18 ஆயிரம் இந்தியர்கள் நிலை கேள்விக்குறியானது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் உள்ள தக்ரீத் நகரில் 46 கேரள செவிலியர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 6 செவிலியர்களும் ஈராக்கில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 600 பேரும் ஈராக்கில் சிக்கி இருப்பதாக அம்மாநில அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் மொசூல் நகரில் பணியாற்றிய 40 இந்தியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
முதலில் இதை உறுதிப்படுத்தாத மத்திய அரசு பின்னர், ஆம் 40 இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்தது. அத்துடன் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியை சிறப்புத் தூதராகவும் அனுப்பி வைத்தது.
கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் பஞ்சாப் மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து கடத்தப்பட்டோரை மீட்கும் பணியில் மும்முரம் காட்டி வந்தது.
இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்ட ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
39 பேர் சுட்டுக் கொலையா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான செய்தி:
மொசூல் நகரில் தாரிக் நூர் அல் ஹூடா என்ற கட்டுமான நிறுவனத்தில் 40 இந்தியர்கள் மற்றும் 53 வங்கதேச நாட்டவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் மொசூல் நகரை கைப்பற்றியதும் பாஸ்போர்ட்டுகளை பணியாளர்களிடம் கொடுத்து சொந்த நாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு அக்கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் பணியாளர்களோ 3 ஆண்டுகால ஊதியம், விமான டிக்கெட் எடுத்துத் தருமாறு கேட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கே உள்ள மருத்துவமனை ஒன்றில் 2 நாட்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இந்தியர்களும் வங்கதேசத்தவரும் தனித்தனியே குர்திஷ் பகுதியான எர்பில் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் எர்பில் நகருக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த 53 பேரும் பாதுகாப்பாக சென்றுவிட்டனர். 40 இந்தியர்களில் ஒருவரான ஹர்கித் என்பவர் மட்டுமே எர்பில் சென்றடைந்துள்ளார்.
அங்கு அவர் வங்கதேச நாட்டின் டாக்காவைச் சேர்ந்த ஜமைல் கான் என்பவரிடம், நாங்கள் 40 இந்தியர்களும் எர்பில் நோக்கி தப்பி வரும்போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டோம். நான் தப்பி வந்துவிட்டேன். இதர 39 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை தங்களிடம் வங்கதேச பணியாளர் ஜமைல்கான் என்பவர் உறுதி செய்து தெரிவித்தார்.
இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு கூறியிருந்தது.
ஆனால் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளோ, ஈராக்கில் உள்ள சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து உறுதியான தகவலைப் பெறும் வரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ஈராக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். அதேபோல் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சில உறவினர்களும், கடத்தப்பட்டோரிடம் தாங்கள் பேசியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
இருப்பினும் கடத்தப்பட்ட 40 பேரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா? அல்லது 39 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனரா? என்பது குறித்த குழப்பம் நீடித்தே வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications