"நம்ம வீடுதான், உள்ளே வாங்க".. நம்பி சென்ற பெண்ணை சுற்றிவளைத்த 4 பேர்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?

இப்பெண்மணியின் கணவர் தன்னை விட வயது குறைந்தவர்களுடன்தான் நட்பு வைத்துக்கொள்வார். அதேபோல அவர்களுடன் சேர்ந்து குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கணவனை இழந்த பெண்மணி ஒருவர் கணவனின் நண்பர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் நகரை சேர்ந்த இப்பெண்மணியின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு நண்பர்கள் வட்டம் அதிகம் இருந்திருக்கிறது. ஆனால் அனைவரும் குடிக்கு அடிமையானவர்கள். இவர் பெரும்பாலும் தன்னைவிட வயதில் குறைந்த நபர்களிடம்தான் நட்பு வைத்துக்கொள்வார். இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தநிலையில் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மனைவிக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. பள்ளி பயிலும் குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு வேலை தேடி அலைந்திருக்கிறார். ஒரு வழியாக தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அந்நிறுவனத்திற்கு பக்கமாக வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுவிடலாம் என யோசித்திருக்கிறார்.

 வாடகை வீடு

வாடகை வீடு

இப்படி வீடு தேடிக்கொண்டிருக்கையில் கணவரின் நண்பர்கள் இப்பெண்மணியை பார்த்திருக்கின்றனர். விசாரித்ததில் இதுபோன்று வீடு தேடி திரிந்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். "வீடுதானே வேண்டும்? இந்த ஏரியாவில் எங்களுக்கு தெரியாத வீடா?" என்று கூறி பெண்மணியை பைக்கில் ஏற்றிக்கொண்டு இரண்டு வீடுகளை காட்டியுள்ளனர். ஆனால் இரண்டும் இப்பெண்மணிக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து மூன்றாவதாக இன்னொரு வீடு இருக்கிறது என்று கூறி இந்த நால்வரில் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார். இந்த வீட்டுக்கு ஏன் வந்திருக்கிறோம் என கேட்டதற்கு,

 கணவரின் நண்பர்கள்

கணவரின் நண்பர்கள்

"இதேபோல மற்றொரு வீடு இருக்கிறது. அதைதான் நாம் பார்க்கப்போகிறோம். எனவே முதலில் இதை பாருங்கள். இது என்னுடைய வீடுதான். நான் உங்களுக்கு டீ போடுகிறேன்" என்று கூறி நால்வரும் சேர்ந்து இப்பெண்மணிக்கு தெரியாமல் மது அருந்தியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதனை எதிர்த்து இப்பெண் கூச்சலிடவே அவர்கள் அவரை பலமாக தாக்கி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பெண்மணி மயங்கிவிடவே, அங்கிருந்து நால்வரும் தப்பியோடியுள்ளனர்.

 கூட்டு பாலியல் பலாத்காரம்

கூட்டு பாலியல் பலாத்காரம்

சிறிது நேரம் கழித்து கண்விழித்த அப்பெண்மணி ஒருவழியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் நால்வர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல தப்பியோடியவர்களை ஒரு சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர். இது குறித்து ஜபல்பூர் எஸ்பி சஞ்சய் அகர்வால் கூறுகையில், "32 வயது மதிக்கத்தக்க பெண்ணை வாடகைக்கு வீடு காட்டுவதாக கூப்பிட்டு வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது பெண்ணை தாக்கியுள்ளனர். எனவே தற்போது பெண்மணி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

கைது

சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் பெண்மணியின் கணவரின் நண்பர்கள். இவர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் பலாத்காரம், தாக்குதல், கொலை முயற்சி போன்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். கணவனின் நண்பர்களால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+