கோவா பிளான் போட்டு கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. கூகுள் மேப்பால் நடுக்காட்டுக்குள் தவித்த குடும்பம்
பீகார்: பீகாரில் இருந்து கோவாவுக்கு செல்வதற்காக புறப்பட்ட 4 பேர் கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் நள்ளிரவில் கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள நடுக்காட்டில் சிக்கி வழி தெரியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு ஆண்டிராய்டு மொபைல் இருந்தாலே போதும் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே செய்யலாம் என்கிற வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. முதலில் எல்லாம் முகவரி என்றாலே ஆட்டோக்காரர்களை தேடும் கண்கள் எல்லாம் இப்போது மொபைல் போனில் கூகுள் மேப் போட்டுக் கொண்டு தெரியாத பகுதிகளுக்கும் சட்டென்று சென்று வருகின்றனர்.

வாடகை கார்கள், கேப்கள், ஸ்விக்கி, ஜொமேட்டோ டெலிவரி, கொரியர் டெலிவரி, சுற்றுலா செல்வோர் என அனைத்து தரப்பினருமே கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் டிராஃபிக் ஜாம், எளிமையான வழிகளைக் கண்டறியலாம். ஒருவகையில் கூகுள் மேப் பல்வேறு பலன்களைக் கொடுத்தாலும் இதன் மூலம் பாடய் பட்டவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.
கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஒரே இடத்தை பலமுறை சுற்றியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், பீகாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்ற குடும்பம் ஒன்று தவறான வழிகாட்டலால் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் வழி பார்ப்பதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, கூகுள் மேப்பில் தவறாக வழியை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தினரும் கூகுள் மேப்பின் உதவியோடு கோவாவுக்கு ஜாலியாக சென்றுள்ளனர்.
நேரம் நெருங்க நெருங்க தான் சம்பவமே நடந்துள்ளது. அடர்ந்த வனப் பகுதியில் கூகுள் மேப் வழி காண்பித்துள்ளது. அந்தக் குடும்பத்தினரும் இயற்கையை ரசித்துக் கொண்டே சென்ற நிலையில் ஒருகட்டத்தில் இருட்டு கட்டத் தொடங்கியுள்ளது. மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யாமல் போயுள்ளது. சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரையும் காணாத நிலையில் அந்தக் குடும்பத்தினர் பதறிப் போயுள்ளனர்.
முடிந்த வரை ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என பார்த்த அவர்கள் ஒருகட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் காருக்குள்ளேயே விடிய விடிய இருந்துள்ளனர். கோவாவுக்கு வழிகேட்ட நிலையில் கூகுள் மேப் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அவர்களை சிக்க வைத்துள்ளது. அந்தக் காரில் குழந்தைகள் உட்பட ஆறு முதல் ஏழு பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
பொழுது விடிந்ததும் மொபைல் சிக்னல் கிடைப்பதற்காக 4 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்து சென்றுள்ளனர். மொபைல் சிக்னல் கிடைத்தவுடன் அவசர உதவி எண் 112 ஐ தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். பின்னர், உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.
கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்து சென்றபோது பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நடைபெற்றதாக அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, நவம்பர் 24 ஆம் தேதி உத்தரப் பிரதேசம், பரேலியில் கூகுள் மேப் வழிகாட்டிய பாதையில் சென்று பாதி கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications