கோடு போட்ட பாஜக.. ரோடு போடும் காங்கிரஸ்! விவசாயிகள் ஹேப்பி அண்ணாச்சி
ராய்பூர்: ஒரு லிட்டர் பசு கோமியத்தை ரூ.4 க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன.
தற்போது காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களில் ஒரு மாநிலமான சத்தீஸ்கரிலும் பாஜக ஆளும் மாநிலங்களின் வழியில் பசுக்களுக்காக தனி திட்டங்களை அரசு தொடங்கி வருகிறது.

மாட்டுச்சாண பெட்டியுடன் பட்ஜெட்
அண்மையில் சத்தீஸ்கரில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவைக்குள் கொண்டு செல்லப்பட்ட பெட்டி மாட்டு சாணத்தில் செய்ததாக முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கான பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அம்மாநில அரசு அறிவித்தது.

ஒரு கிலோ மாட்டுச் சாணம் ரூ.1.50
கடந்த 2020 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் அரசு விவசாயிகளிடம் மாட்டுச் சாணத்தை பெற்று பணம் கொடுக்கும் கோதன் நியாய் யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை ரூ.1.50க்கு சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது. லைவ்ஸ்டாக் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி சத்தீஸ்கரில் மட்டும் 2.61 லட்சம் கால்நடைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோமியம் பிடித்துக் கொடுத்தால் காசு
அந்த வழியில் கடந்த மார்ச் மாதம் பசு கோமியத்துக்கு பணம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக தொழில்நுட்பக்குழு அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், இந்த தொழில்நுட்பக்குழு இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து செயல்படுத்த உதவும் என்றார்.

ஏன் இந்த திட்டம்?
இந்திரா காந்தி வேளாண் கல்லூரி மற்றும் காமதேணு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த குழு, பசு கோமியத்தை சேகரிப்பது எப்படி? அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன? என்பதையும் கோமியத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யும். இந்த குழு பசு கோமியத்தின் மூலம் இயற்கை உரங்கள், இயற்கை நொதிகள் தயாரிக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்பித்தது

திட்டம் எப்படி செயல்படும்?
ஏற்கனவே கால்நடை விவசாயிகளிடம் மாட்டுச் சானத்தை சேகரிக்கும் அதே வழிமுறையை கொண்டே கோமியத்தையும் சேகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் கால்நடை கூடங்களில் கோமியங்கள் சேகரிக்கப்படும் என்றும், அதற்கான தொகை கால்நடை வளர்ப்பவர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் ஆலோசகர் பிரதீப் ஷர்மா தெரிவித்து இருந்தார்.

லிட்டர் கோமியம் ரூ.4
இந்த திட்டத்துக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் இதனை தொடங்கி வைக்கிறார். இதன் கீழ் விவசாயிகளிடம் லிட்டர் கோமியம் ரூ.4-க்கு கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பசுக்கள் தங்குமிடங்களில் கோமியம் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தெரிவித்து இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications