ஹரித்துவார் கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி... 4 தீவிரவாதிகள் சிக்கினர்!
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரித்துவார் அருகே ரூர்கியில் அக்லாக் என்ற சந்தேக நபர் முதலில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் டேராடூன் அருகே மங்களூரில் பதுங்கியிருந்த மேலும் 3 பேர் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இந்த 4 பேரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்றும் வரும் ஆர்த் கும்பமேளாவை சீர்குலைக்கும் நோக்கத்தில் சதித் திட்டத்துடன் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
ஹரித்துவாரில் நடைபெறும் ஆர்த் கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவதற்காக நாள்தோறும் பல லட்சம் பேர் திரள்வர். கடந்த ஜனவரி 1-ந் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா ஏப்ரல் 30-ந் தேதி நிறைவடைய உள்ளது.
இதனிடையே ஹரியானாவிலும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 2 பேர் பிடிபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications