கலப்பு திருமணம் குற்றமா? இளம்பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு கொடுத்த தண்டனையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் பெண் ஒருவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினரை ஊர்மக்கள் ஒதுக்கி வைத்ததோடு, அந்த பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டையடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் ராயகடா மாவட்டம் காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

40-members-of-a-womans-family-were-forced-to-shave-their-heads-as-part-of-a-purification-ritual-aft

இளம்பெண் சார்ந்த சமுதாயத்தை பொறுத்தவரை மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்யக்கூடாது என்று பெரியவர்கள் வகுத்து வைத்துள்ளனர். ஆனால் அந்த இளம்பெண் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை விரும்பினார்.

அதுமட்டுமின்றி அந்த இளம்பெண் கலப்பு திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக தனது காதலனிடம் வாழ்ந்தால் இருவரும் சேர்ந்து தான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றாக சாக வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து காதலன், இளம்பெண்ணை திருமணம் செய்தார். மேலும் அவர்கள் 2 பேரும் வேறு கிராமத்துக்கு சென்றுவிட்டனர்.

இதுபற்றி இளம்பெண்ணின் குடும்பம் மற்றும் கிராமத்தினருக்கு தகவல் தெரிந்தது. கிராமத்தினர் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் மீது கடும் கோபம் கொண்டனர். அதுமட்டுமின்றி இளம்பெண்ணின் குடும்பத்திரை ஊரை விட்டு ஒதுக்கியும் வைத்தனர். அதன்பிறகு ஒருவழியாக கிராமத்தினர் மனம் இறங்கி வந்தனர்.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை அழைத்து அனைவரும் மொட்டையடித்து கொள்ள வேண்டும். மொட்டையடித்தால் தான் கலப்பு திருமணம் செய்த பெண்ணின் பாவம் நீங்கும். மொட்டையடித்தால் மட்டும் தான் கிராமத்தில் மீண்டும் சேர்ப்போம். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் கிராமத்தை விட்டு ஒதுங்கியே வாழ வேண்டும் என்று எச்சரித்தனர்.

இதனால் வேறு வழியின்றி அந்த பெண்ணின் குடும்பத்தினர் மொட்டையடிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்துஅவர்கள் கிராமத்து கோவிலில் கால்நடையை பலி கொடுத்து பூஜை செய்தனர். அதன்பிறகு காதல் திருமணம் செய்த இளம்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மொட்டையடித்து கொண்டனர். அதன்பிறகு பாவம் நீங்கியதாக கூறி அவர்களை குளித்துவிட்டு கிராமத்துக்குள் அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் வயலில் வரிசையாக இளம்பெண்ணின் குடும்பத்தினரை அமர வைத்து மொட்டையடிப்பது இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக காசிப்பூர் பிளாக் வளர்ச்சி அதிகாரி விஜய் சோய் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கிராமத்துக்கு சென்று அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+