நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் சதிகார 40 எம்.பி.க்கள்: காங். மீது பிரதமர் மோடி தாக்கு
சண்டிகர்: நாட்டின் முன்னேற்றத் தடுக்க நாடாளுமன்றத்தில் 40 காங்கிரஸ் எம்.பி.க்கள் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தாக்கியுள்ளார்.
பஞ்சாப், ஹரியானா மாநில தலைநகரான சண்டிகர் நகரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மக்கள் மன்றமே பெரிது
தேர்தல் மூலமாக மக்கள் அளித்த பெருவாரியான தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் லோக்சபாவில் அரசின் குரல் முடக்கப்படுகிறது. இதனால்தான் மக்கள் மன்றத்தில் மனக்குமுறலை தெரிவிக்கிறேன்.

40 சதிகார எம்.பி.க்கள்
ஜனநாயகத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. சிலர் அடாவடித்தனமாக நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர்.
400 எம்.பி.க்கள் ஆதரிக்கும் திட்டங்களை எல்லாம் எதிர்ப்பதன் மூலமாக 40 காங்கிரஸ் எம்.பி.க்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க சதி செய்து வருகின்றனர்.

கேளுங்க...பேசுங்க..
நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புங்கள். பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் நடத்துங்கள். நாடாளுமன்றத்தை சுமுகமாக செயல்பட அனுமதியுங்கள்.

மன்னிப்பே கிடையாது...
வாக்களித்த மக்கள், தங்களது எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதைவிட துரதிர்ஷ்டவசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் இப்படி நடந்துகொள்ளும் இந்த எம்.பி.க்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications