தோட்டத்துக்குள் அக்கிரமம்.. 40 வயது பெண்.. அதுவும் கொரோனா நோயாளியை.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்
: 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்
புவனேஸ்வர்: கொரோனா நோயாளி என்றுகூட பார்க்கவில்லை..40 வயது பெண்ணை தேயிலை தோட்டத்துக்குள் தூக்கி சென்று 2 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தொற்று தலைவிரித்தாடுகிறது.. தினந்தோறும் கொரோனா கேஸ்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. அதற்கேற்றார்போல மரணங்களும் அதிகரித்தபடியே வருகின்றன.
எத்தனையோ கட்டுப்பாடுகளை போட்டும்கூட, இயல்பு நிலைக்கு இந்தியாவால் வர முடியாத நிலைமை உள்ளது.. இதனால் மத்திய மாநில அரசுகளே கையை பிசைந்து நிற்கின்றன.

பலாத்காரம்
இப்படி ஒரு ஆபத்தான சூழலில் நாம் சிக்கியிருந்தாலும் வன்முறை சம்பவங்கள் குறைவே இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.. கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள், பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.. அதிலும் கொரோனா வார்டுகளிலேயே சில பாலியல் அத்துமீறல்கள் நடப்பது கொடுமையாக உள்ளது.!

கொடுமை
இதைவிட ஒரு கொடுமை அசாமில் நடந்துள்ளது.. சாரைடியோ மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 40 வயது பெண்.. இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. அதனால், ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.. பிறகு மெல்ல மெல்ல குணமாகியும் வந்த நிலையில், அவரை கடந்த 27-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். அதனால் வீட்டுக்கு செல்ல தயாராகி, ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தால், ஒரு ஆம்புலன்ஸ்கூட காணோம்..

ஆம்புலன்ஸ்
அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இவரது வீடு உள்ளது.. பொது முடக்கம் என்பதால் வேறு வாகனங்களும் கிடைக்கவில்லை.. அதனால், தன்னுடைய மகளுடன் நடந்தே வீட்டிற்கு செல்ல ரெடியானார்.. இப்போதுதான் தொற்று குணமாகி இருந்ததால், அவரால் வேகமாகவும் நடக்க முடியவில்லை.. அப்போது இரவு 7 மணி ஆகியிருந்தது.. பாதையும் சரியில்லாமல் இருந்தது..

அதிர்ச்சி
ஒரு பகுதியில் நடந்து வந்தபோது 2 ஆண்கள் அவர்களை வழிமறித்தனர்.. இதில், அவரது மகள் தப்பி ஓடிவிட்டார்.. ஆனால், நோயாளி தாயை, காமுகர்கள் 2 பேரும் பக்கத்தில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் வைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர்.. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் எட்டியதும் விரைந்து நடவடிக்கை எடுத்தன.. குற்றவாளிகள் 2 பேரையும் தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு தற்போது கைது செய்துள்ளனர்.. கொரோனா நோயாளி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications